விஷமே இல்லாம வெறும் வெளிச்சத்தால பூச்சியை விரட்ட முடியுமா?

விஷமே இல்லாம வெறும் வெளிச்சத்தால பூச்சியை விரட்ட முடியுமா? கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல?

ஆனா கலிபோர்னியாவுல இது நிஜமாவே நடந்துட்டு இருக்கு.

அமெரிக்காவை சேர்ந்த TRIC Robotics நிறுவனம் Luna-னு ஒரு தானியங்கி ரோபோவை உருவாக்கி இருக்காங்க.

இது ராத்திரி நேரத்துல ஸ்ட்ராபெரி வயல்களுக்குள்ள தானா ஊர்ந்து போய் பயிர்கள் மேல UV-C வெளிச்சத்தை பாய்ச்சுது.

இந்த வெளிச்சம், சாதாரண கண்ணுக்கு தெரியாத பூஞ்சை நோய், சிலந்திப் பூச்சி மாதிரியான பூச்சிகளோட DNA-வை சேதப்படுத்தி அவை பரவாம தடுத்துடுது.

இருட்டுல தான் இதன் வேலை இன்னும் நல்லா நடக்குதாம், ஏன்னா சூரிய வெளிச்சம் இல்லாததால அந்த பூச்சிகளால தங்களை தாங்களே சரி செஞ்சுக்க முடியாது. இன்னொரு நல்ல விஷயம், ராத்திரி தேனீக்கள் எல்லாம் தூங்கிடுறதால அவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்ல.

இப்போதைக்கு கலிபோர்னியாவுல 1500 ஏக்கருக்கு மேல இந்த முறை பயன்படுத்தப்படுது. இதனால பூச்சி மருந்து பயன்பாடு 70% வரை குறைஞ்சிருக்குனு சொல்றாங்க.

மறுநாள் காலைல விவசாயிகள் எந்த ரசாயன பயமும் இல்லாம வயலுக்குள்ள இறங்கி வேலை பார்க்க முடியும்.

நாம தூங்குற நேரத்துல நமக்கான சாப்பாடு பாதுகாக்கப்படுதுனு நினைக்கும்போது ஒரு சின்ன நிம்மதி தான்.

விவசாயத்துல இப்படி சத்தமே இல்லாம நடக்குற பெரிய மாற்றங்கள் தான் நாளைய விவசாயத்தை மாத்த போகுது.

Recommended For You

About the Author: admin