சீன விஞ்ஞானிகள் ஒரு ஆச்சரியமான விஷயத்தை சாதித்து இருக்காங்க.
மனித ஸ்டெம் செல்களில் இருந்து வளர்க்கப்பட்ட ஒரு மிகச் சிறிய மூளை போன்ற திசுவை வைத்து ஒரு ரோபோவை இயக்கி இருக்காங்க. இதற்கு பெயர் Brain Organoid.
வழக்கமா ரோபோக்கள் கம்ப்யூட்டர் சிப் மூலமா தான் இயங்கும். ஆனா இந்த புதிய முறையில், உயிருள்ள நரம்பு செல்களையும் எலக்ட்ரானிக் சிப்பையும் ஒன்றாக இணைச்சிருக்காங்க. அந்த சின்ன மூளை திசுவில் இருந்து வரும் சிக்னல்களை சிப் படித்து ரோபோவுக்கு அனுப்பும், ரோபோவின் அசைவுக்கு ஏற்ப மீண்டும் அந்த திசுவுக்கு தகவல் கொடுக்கும்.
ஆய்வகத்தில் நடந்த சோதனையில் இந்த ரோபோ, தானாகவே தடைகளை தாண்டுவது, பொருட்களை பிடிப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளை கற்றுக்கொண்டது. யாரோ Program பண்ணினது போல இல்லாமல், அனுபவத்தில் இருந்தே கற்றுக்கொள்கிறது என்பது தான் இதில் ஸ்பெஷல்.
இது முழுமையான மனித மூளை கிடையாது. ஆரம்ப நிலை மூளை வளர்ச்சியை போல செயல்படும் ஒரு சிறு நரம்பு செல்களின் கூட்டம் மட்டுமே. இன்னும் இது ஆய்வக சோதனை அளவில் தான் இருக்கிறது.
இருந்தாலும், எதிர்காலத்தில் மூளை – கம்ப்யூட்டர் இணைப்பு தொழில்நுட்பம், நரம்பியல் நோய்களுக்கான ஆராய்ச்சி, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்கள் என பல துறைகளில் இது பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். உயிரியல் அறிவும் செயற்கை தொழில்நுட்பமும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

