சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ புதிய சாதனை!

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ புதிய சாதனை!

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளை எட்டிய படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக ‘பட்டாம்பூச்சி’ பாடல் வெளியானதைத் தொடர்ந்து கவனம் பெற்ற நிலையில், கென் எழுதிய ‘வெட்டிங் சாங்’ பாடலை சூர்யா பாடியிருப்பதும் படத்தின் இசை சார்ந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது.

குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதைக்களத்தால் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு இரு மொழி ரசிகர்களிடையேயும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகளவில் 9 நாட்களில் இப்படம் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூர்யாவுக்கு மற்றொரு வெற்றிப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin