அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்துள்ள இந்த விளம்பரத்தில், சகோதரர்களின் மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டும் இந்து பண்டிகைக் கொண்டாட்டம் சித்திரிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தில் கிருதி சனோன் அரைகுறை ஆடையுடன் (Cropped top and skirt) நடித்திருப்பதாகக் கூறி, பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் செவ்வாயக்கிழமை கடுமையாக விமர்சித்தார்.

Recommended For You

About the Author: admin