‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள் உன்னிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும்.
மிகவும் அருமையாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனப் பாராட்டியுள்ளார்.
மேலும், “ஒரு நாள் நாம் சந்திப்போம். சிறப்பாக செய்கிறாய்.
கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” எனக் கூறி அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவா நிர்வாணா இயக்கியுள்ள ‘இருமுடி’ படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
குறித்த திரைப்படத்தின் வசூல் ரூ.80 கோடியை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது

