5 நிமிடம் குளித்ததற்கு 1,800 டொலர் அபராதம் – 

5 நிமிடம் குளித்ததற்கு 1,800 டொலர் அபராதம் –

அவுஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், வெறும் 5 நிமிடங்கள் குளித்ததன் காரணமாக தனக்கு 1,800

டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வமிகா என்ற அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தான் குளித்தபோது எழுந்த நீராவி காரணமாகக் கட்டடத்தின் தீயணைப்பு அலாரம் இயங்கியதாகவும்,

 

இதனால் தனக்கு இந்தப் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தனக்கு எளிதில் குளிர் பிடிக்கும் என்பதால் அவர் குளியலறையின் வெளியேற்றும் விசிறியை இயக்கவில்லை. அதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 

அலாரம் ஒலிக்கத் தொடங்கியதும் அது வழக்கமான ஒத்திகையாக இருக்கும் என்று அவர் முதலில் நினைத்துள்ளார்.

 

இருப்பினும், கட்டடத்தின் மேலாளர் உடனடியாக அவரது வீட்டிற்கு வந்து சோதனை செய்த பின்னர்தான், தான் குளித்தபோது

 

எழுந்த நீராவியால்தான் அலாரம் இயங்கியது என்பதை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டுள்ளார்.

 

குளியலறைக்கு மிக அருகில் Fire detector பொருத்தப்பட்டிருப்பது குறித்தும் அவர் ஆச்சரியம் வெளிப்படுத்தியுள்ளார்.

 

தீயணைப்பு வாகனம் வந்து சென்றதற்கான சேவைக் கட்டணமாகக் கருதியே தன்னிடம் இந்த 1,800 டொலர் வசூலிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சம்பவம் இணையத்தில் பரவியதை அடுத்து பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

சாதாரண குளியலறை நீராவி தீயணைப்பு அலாரத்தை இயக்குமா அல்லது கட்டடத்தின் அலாரம்

 

அமைப்பு மிக உணர்திறன் கொண்டதா என்பது குறித்து நெட்டிசன்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

முதல்முறை தவறு நடக்கும்போது உடனடியாக அபராதம் விதிப்பதை விட, குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்

 

அல்லது விலக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் வாதிட்டு வருகின்றனர். அலாரத்தில் கோளாறு

 

இருக்கிறதா என்பதைச் சரிபார்க்குமாறு அந்தப் பெண்ணுக்குப் பலரும் அறிவுரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin