ஒக்டோபரில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஒக்டோபரில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 815 ரூபாவாகவும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin