நான் அதிபரானால் நிதிநிலை சீரமைக்கப்படும்” என மரின் லெ பென் வாக்குறுதி!

நான் அதிபரானால் நிதிநிலை சீரமைக்கப்படும்” என மரின் லெ பென் வாக்குறுதி!

மக்ரோனின் 10 ஆண்டு கால ஆட்சிக்குக் கடும் கண்டனம்: ”

2027 பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடும் மரின் லெ பென் (Marine Le Pen), தான் எலிசே (Élysée) மாளிகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால்,

 

வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள பிரான்சின் தேசியக் கடனைச் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளார்.

 

நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 19) ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள தேசிய அணி (RN) கட்சியின் வேட்பாளரான அவர்,

 

பொது நிதியில் மண்டிக்கிடக்கும் குப்பைகளை “ஆஜியஸ் தொழுவத்தைச் சுத்தம் செய்வது போல” (écuries d’Augias) அடியோடு தூய்மைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

 

2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு, பிரான்ஸ் நாடு கடன் வாங்கும் வட்டி விகிதங்கள் தற்போது மோசமான உச்சத்தைத் தொட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

 

இது “பத்தாண்டு கால மக்ரோனிசத்தின் (macronisme) மன்னிக்க முடியாத விளைவு” என விமர்சித்துள்ள மரின் லு பென்,

 

அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) மற்றும் முன்னாள் பிரதமரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான எட்வர்ட் பிலிப் (Édouard Philippe) ஆகிய இருவர் மீதும் கடுமையான

 

குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “கையிருப்பில்லாத காசோலைகளை (chèques sans provision) வாரி வழங்கிய இவர்களின் தவறுகளுக்கான

 

விளைவுகளைத்தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என அவர் சாடியுள்ளார்.

 

“நாட்டின் கணக்கு வழக்குகள் தற்போது மோசமான தொழுவமாக மாறிவிட்டன. அவற்றைச் சுத்தப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது!”

 

என்று குறிப்பிட்ட அவர், இந்த மாபெரும் பணியைச் செய்து முடிக்கத் தன்னிடம் “தைரியமும் உறுதியும்” (courage et de la détermination) இருப்பதாகப் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.

 

பிரான்சின் கடன் வட்டி விகிதங்கள் உச்சம் தொட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஒரே அதிபர் வேட்பாளர் மரின் லெ பென் மட்டுமல்ல. அவரது போட்டியாளரான டேவிட் லிஸ்னார்ட் (David Lisnard) என்பவரும் இது

 

குறித்துப் பேசுகையில், “இந்த ஆண்டு பிரான்சின் தேசியக் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டை விட, கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே மக்கள் அதிகப் பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார்.

 

‘புதிய ஆற்றல்’ (Nouvelle Énergie) அமைப்பின் நிறுவனரான அவர், “நலன்புரி அரசு (État providence) என்ற தற்போதைய கட்டமைப்பை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்”

 

என்றும், “ஒரு பெருநிறுவனத்தை நிர்வகிப்பதைப் போல அரசை நிர்வகிக்க ஒரு உண்மையான தலையீட்டுத் திட்டம் அவசியம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

“கடன் என்பது வெறும் மாயையல்ல; எந்த விளைவுகளும் இல்லாமல் அதனைத் தொடர்ந்து நீட்டிக்க முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin