பிரான்ஸ் முழுவதும் வன்முறையாக மாறிய மாணவர் போராட்டம் !!

பிரான்ஸ் முழுவதும் வன்முறையாக மாறிய மாணவர் போராட்டம் !!

ஆயிரக்கணக்கானோர் கைது – 400 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்!

பிரான்ஸ் முழுவதும் இந்த வாரம் தீவிரமடைந்த மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

வீதிகளில் தீ மூட்டப்பட்டு, பாடசாலை வாயில்கள் மறிக்கப்பட்டு, கலகமடக்கும் காவற்துறையினருடன் (Riot Police) இளைஞர்கள் மோதலில் ஈடுபடும் தீவிர காட்சிகள் பதிவாகியுள்ளன.

வன்முறை மற்றும் அமைதியின்மை காரணமாக நாடு முழுவதும் 564 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் தேசிய கல்வி அமைச்சு வெள்ளிக்கிழமை நண்பகல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

இந் அமைதியின்மை காரணமாகக் குறைந்தபட்சம் 400 உயர் பாடசாலைகள் (High Schools) – அதாவது நாட்டின் மொத்தப் பாடசாலைகளில் பத்தில் ஒன்று என்ற விகிதத்தில் – முழுமையாக மூடப்பட்டுள்ளன.

 

மோதல்களின் போது 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பல ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.

 

அத்துடன் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் சூழல் தொடர்பான அதிருப்தி காரணமாக, இடைநிலைப் பாடசாலைகளைச் சுற்றி அமைதியான முறையில் கடந்த வாரம் இப் போராட்டம் ஆரம்பமானது.

 

எனினும், பிரான்சின் முக்கிய இடைநிலைப் பாடசாலை மாணவர் சங்கம் நாடு தழுவிய முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து,

 

இது அரசாங்கத்திற்கு எதிரான பரந்த அதிருப்தியாக உருவெடுத்து நாடு முழுவதும் பரவியது.

 

இப் போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய ஆதரவாளர்களும் பெருமளவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin