நெருப்பைக் கக்கும் ட்ரோன்கள், ரோபோக்கள்: ‘சென்டர்-2026’ பிரம்மாண்ட கூட்டுப் போர் பயிற்சியை நிறைவு செய்தது ரஷ்யா!
ரஷ்யா மற்றும் கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பின் (CSTO) நட்பு நாடுகள் இணைந்து நடத்திய பிரம்மாண்டமான ‘சென்டர்-2026’ (Center-2026) கூட்டுப் போர் பயிற்சிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.
நவீன போர்க்கள உத்திகள், ட்ரோன் தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபோட்டிக் அமைப்புகளை முன்னிலைப்படுத்தி இந்தப் பயிற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்: 47,000-க்கும் மேற்பட்ட படைவீரர்கள்: ரஷ்யா மற்றும் CSTO உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 47,000-க்கும் அதிகமான இராணுவத்தினர்
எல்லைப் பகுதி மோதல்கள் மற்றும் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான ஒத்திகைகளில் ஈடுபட்டனர்.
நெருப்பைக் கக்கிய ட்ரோன்கள்:
வானிலிருந்து தீப்பிழம்புகளையும் வெடிபொருட்களையும் உமிழும் நவீன ட்ரோன்களின் சாகசங்கள் பயிற்சியில்
பெரும் கவனத்தை ஈர்த்தன.தரைவழி ரோபோக்கள் & ரொக்கெட் ஏவுதல்கள்: படைவீரர்களுடன் இணைந்து தரைவழி போர் ரோபோக்கள் நகர்த்தப்பட்டதுடன், அதிநவீன ரொக்கெட் தாக்குதல் ஒத்திகைகளும் இடம்பெற்றன.
போலி கிராமங்களில் அதிரடி சோதனை: மாதிரியாக அமைக்கப்பட்ட போலி கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அனைத்து நிலப்பரப்பு
வாகனங்கள் (ATVs) மூலம் வீரர்கள் ஊடுருவி விரைவுத் தாக்குதல்களை நடத்தினர்.மின்னணு போர்முறை (Electronic Warfare): ஆளில்லா வான்வழி சாதனங்கள் மற்றும் ரொபோட்டிக்ஸுடன் இணைந்து
ரேடார் மற்றும் தொலைத்தொடர்புகளை முடக்கும் மின்னணு போர்முறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தினால் திட்டமிடப்பட்ட ‘சென்டர்-2026’ போர் பயிற்சியானது, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 03 திகதி வரை ரஷ்யாவின் மத்திய இராணுவ மண்டல பயிற்சி மைதானங்கள்
மற்றும் காஸ்பியன் கடல் பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் ரஷ்யாவுடன் பெலாரஸ், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாட்டுப் படைகளும் பங்கேற்றன.

