பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 10% வரை போதைப்பொருள் பாவனை கண்டறியப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 5% முதல் 10% வரையிலானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேல், தென், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை 7,602 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நான்கு வகையான போதைப்பொருட்கள் தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்யப்பட்ட சிலர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் சாரதிகளின் கைகளில் இருக்கும் நிலையில், இந்த அதிர்ச்சி தகவல் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது!

பேருந்து சேவைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கடுமையான நடவடிக்கை அவசியமா?