இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை !!
அதிர்ச்சியில் இலங்கை அரசு!!
ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: ‘அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் இலங்கையை மட்டும் இலக்கு வைத்தவை அல்ல’ – வெளிவிவகார அமைச்சு விளக்கம்!
இலங்கைக்கு அருகாமையிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால்,
இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ பிரத்தியேகமாக இலக்கு வைத்து விதிக்கப்பட்டதொன்றல்ல என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளர் நாயகமுமான துஷார ரொட்ரிகோ தெளிவுபடுத்தியுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ, “இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது இலங்கையையோ குறிவைத்து நடைமுறைப்படுத்தப்படும் தடையல்ல;
மாறாக, உலகம் முழுவதற்கும் பொதுவாகப் பிரயோகிக்கப்படும் அமெரிக்காவின் வழமையான உலகளாவிய கொள்கை (Global Policy) மட்டுமே” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய தடைகள் தொடர்பான விதிமுறைகள் சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு கட்டமைப்பிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வோல்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்திப் பின்னணி: இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்கினால்,
இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தது.
இச்செய்தி சர்வதேச மற்றும் உள்நாட்டு மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சு இவ் உத்தியோகபூர்வ விளக்கத்தை முன்வைத்துள்ளது.

