20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள்: திங்கட்கிழமை வெளியாகும் இறுதி முடிவு!

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள்: திங்கட்கிழமை வெளியாகும் இறுதி முடிவு!

இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், புதிய கட்டண உயர்வு முறையியல் மற்றும் விலை சூத்திரத்தை ஆய்வு செய்வதற்காக இந்த கால அவகாசம் பெறப்பட்டுள்ளது.

டீசல், டயர்கள், பேட்டரிகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஊழியர் ஊதியம் உள்ளிட்ட உண்மையான செலவினங்களை கருத்தில் கொண்டு, சுமார் 20% கட்டண உயர்வை எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. எம். எச். அதிகாரி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin