வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டங்கள் 5இல் 73,000க்கும் மேற்பட்ட மக்கள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஆபத்து நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.4,800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வறட்சி நிலை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

