திருமணமாகி 3 மாதங்களேயான யுவதிக்கு நேர்ந்த சோகம்

திருகோணமலை, நிலாவெளி – இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவர், திருமணமான சில மாதங்களிலேயே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ஆம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை எரித போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குப்பைகளை எரிக மணெண்ணெய் கிடைக்காத காரணத்தால், வீட்டில் எஞ்சியிருந்த Paint Thinner (தின்னர்) திரவத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
இது தீப்பற்றக்கூடியது என்பதால், அதிலிருந்து பரவிய தீ அவரது ஆடைகளிலும் பிடித்துள்ளது.
இதனால் பலத்த தீக் – காயங்களுக்கு உள்ளான அவர், முதலில் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: admin