ட்ரம்ப்பின் எச்சரிக்கை எதிரொலி: கச்சா எண்ணெய் விலை மீண்டும் 90 டொலரைத் தாண்டியது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஓமான் தொடர்பான கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் அதிரடி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 அமெரிக்க டொலரைத் தாண்டி, 91.24 டொலராக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் உலக எரிசக்தி சந்தையில் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எண்ணெய் விலை உயர்வு தொடருமானால், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளிலும் தாக்கம் ஏற்படக்கூடும்.

உலக எண்ணெய் சந்தை மீண்டும் பதற்றத்தில்!

Recommended For You

About the Author: admin