போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த முடியும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறைமை ஊடாக மாத்திரமே செலுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் கட்டண முறைமையை நாடளாவிய ரீதியில் தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கட்டமைப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாரதிகள் நேர விரயமின்றி இலகுவாக இணையவழி அல்லது டிஜிட்டல் தளங்கள் ஊடாகத் தங்களது அபராதங்களை நேரடியாகச் செலுத்த முடிவதுடன், போக்குவரத்து நிர்வாகச் செயல்பாடுகள் மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் துரிதமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

