சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பிய 46 வயதுடைய நபர் கைது!

சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பிய 46 வயதுடைய நபர் கைது!

சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பிய 46 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (19) கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

⚠️ உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்ப்போம்.

Recommended For You

About the Author: admin