கொடிகாமம் சந்தையில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல்: தம்மோடு ஆலோசிக்கப்படவில்லை என வியாபாரிகள் தர்க்கம்!
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொதுச் சந்தையில் அமையவுள்ள சந்தைக் கட்டடத்திற்கான அடிக்கல் இன்று(14) பிற்பகலில் நாட்டி வைக்கப்பட்டது.
இதன்போது சந்தை வியாபாரிகள் அமையவுள்ள சந்தைக் கட்டடத் தொகுதி தொடர்பாக தங்களோடு கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பான தெளிவூட்டல் கூட்டம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

