யாழ் சிறைக்குள் கொடூர சித்திரவதை. குடும்பஸ்தர் மரணம்!!
யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் கடுமையான சித்தரவதை காரணமாக விளக்கமறியல் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.
இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 சிறு பெண் பிள்ளைகளின் தந்தையான 39 வயதான இராமச்சந்திரன் ஜெகன் என்பவர் தனது மனைவியை தகாத முறையில் ஏசி தாக்க முயன்ற தனது தங்கையின் கணவனை தாக்கிய காரணத்தால் கைது செய்யப்பட்டு 24.08.2026 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாட்களில் ஜெகன் சிறைச்சாலையில் கடுமையான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதன் காரணமாக ஜெகனின் உடற்பகுதியில் காயங்களும் உட்காயங்களும் காணப்பட்டு அதனால் கிருமித் தொற்று ஏற்பட்டு கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியதாகவும் இது தொடர்பாக ஜெகன் தன்னை சிறைச்சாலையில் பார்க்க வந்த மனைவியிடம் தெரிவித்து உடனடியாக சட்டத்தரணியை தொடர்பு கொண்டு தனக்கான சிகிச்சைக்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறும் அழுதழுது கோரியுள்ளார்.
இது தொடர்பாக உடனடியாகவே மனைவி மல்லாகம் பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியான கீர்த்தனாவிடம் முறையிட்டுள்ளார். கீர்த்தனாவே இந்த வழக்கை தொடக்கத்திலிருந்து கையாண்டு வந்துள்ளார்.
இருப்பினும் கீா்த்தனா ஜெகனை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த 4 தடவைகளும் நீதிமன்றத்தில் ஆயராகவில்லை எனத் தெரியவருகின்றது.
இந் நிலையில் கடந்த 16ம் திகதி மல்லாகம் நீதிமன்றத்திற்கு நடக்க முடியாது 4 சிறைக்காவலர்களால் துாக்கி வரப்பட்ட ஜெகன் பிணையில் விடுவிக்கப்பட்டான்.
பிணையில் விடுவிக்கப்பட்ட போது ஜெகன் இரத்தவாந்தி எடுத்ததுடன் ஆடையுடன் கருமையான நிறத்தில் மலம் வெளியேறிய நிலையில் மயக்கமடைந்து தெல்லிபழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தநாள் 17.09.2026 ல் மரணமடைந்துள்ளார்.

