தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: நல்லூரில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற 6ஆம் நாள் அஞ்சலி நிகழ்வுகள்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது, மாவீரர் சேரமானின் மகன் துஷாந்தன் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் செப்டெம்பர் 26ஆம் திகதி வரை 12 நாட்கள் நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து திலீபன் வீரச்சாவடைந்தார்.

ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் அவரது நினைவேந்தல் வார நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin