அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பாஷார் அல்-அசாத் (Bashar al-Assad) மற்றும் தெற்கு டேரா (Deraa) மாகாணத்தின் முன்னாள் அரசியல் பாதுகாப்புத் தலைவர் ஆதேஃப் நஜீப் (Atef Najib) ஆகியோருக்கு டமாஸ்கஸ் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பரில் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பாஷார் அல்-அசாத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று அங்குத் தஞ்சமடைந்துள்ளார்.
இதனால் அவருக்கு இல்லாத நிலையிலேயே (In Absentia) நீதிமன்றம் இந்த மரண தண்டனையை அறிவித்துள்ளது.
2011-இல் சிரிய உள்நாட்டுப் போர் வெடிக்கக் காரணமாக இருந்த டேரா மாகாண மக்கள் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கிய
குற்றத்திற்காக ஆதேஃப் நஜீப் குற்றவாளியாகக் காணப்பட்டு நேரடியாக நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
திட்டமிடப்பட்ட கொலைகள், சட்டவிரோதக் கைதுகள் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இருவருக்கும் கடுமையான தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
சிரியாவில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பிறகு முன்னாள் ஜனாதிபதி அசாத் மீது விதிக்கப்பட்ட முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.

