தீர்வு கிடைக்காவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்?

தீர்வு கிடைக்காவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்? – பவுசர் உரிமையாளர்கள் எச்சரிக்கை

எரிபொருள் போக்குவரத்துக்கான விலை நிர்ணய சூத்திரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பவுசர் உரிமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எரிபொருள் விலை, உதிரிப்பாகங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததால் செயல்பாட்டு செலவுகள் 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin