மத்திய கிழக்கு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் புதிய கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மெக்காவில் ஆகஸ்ட் 7ஆம் திகதி நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்ன தெரியுமா?
மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது வெளிப்புற ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என்பதுதான்.
இதன் மூலம் மூன்று நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட உள்ளது.
இதனால்தான் சர்வதேச ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் இதை “இஸ்லாமிய நேட்டோ” என ஒப்பிட்டு வருகிறார்கள்.
ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், இது அதிகாரப்பூர்வமாக “Islamic NATO” என்று அழைக்கப்படும் புதிய அமைப்பு அல்ல. இது மூன்று நாடுகளுக்கிடையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் உருவாகும் பின்னணியில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றங்களும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.
மேலும், சவுதி அரேபியாவிடம் மிகப்பெரிய பொருளாதார மற்றும் எண்ணெய் வளம் உள்ளது.
துருக்கி தனது சொந்த ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் குறிப்பாக ட்ரோன் உற்பத்தியில் வலுவான நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணு ஆயுத திறன் கொண்ட நாடாகவும், பெரிய ராணுவ சக்தியைக் கொண்ட நாடாகவும் உள்ளது.
இதனால் இந்த மூன்று நாடுகளும் இணைந்திருப்பது மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் பாதுகாப்பு கணக்கீடுகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளை, இந்த ஒப்பந்தம் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைத்து உருவாக்கப்படவில்லை என்றும், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய கூட்டணி எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளை இணைத்துக்கொள்ளுமா?
அல்லது இது மூன்று நாடுகளுக்குள் மட்டுமே இருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தமாக தொடருமா?
அடுத்தகட்ட நகர்வுகள்தான் இதற்கான பதிலை சொல்லும்.
உலக அரசியலில் நடக்கும் இப்படியான முக்கிய மாற்றங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் Page-ஐ Follow பண்ணுங்க!

