உலகின் சிறந்த 50 சுற்றுலா இடங்களில் இலங்கையின் ‘தொட்டலகல’ சொகுசு விடுதி!

இலங்கையின் ஹப்புத்தளையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தொட்டலகல’ (Thotalagala) சொகுசு விடுதி, சர்வதேச அளவில் பெருமைக்குரிய ‘World’s 50 Best Discovery’ பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது.

‘Island Life – Sri Lanka’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த விடுதி, உலகப் புகழ்பெற்ற லிப்டன் சீட் (Lipton’s Seat) பகுதியை அண்மித்து அமைந்துள்ளது.

காலனித்துவ கட்டிடக்கலை மரபையும் நவீன சொகுசு வசதிகளையும் ஒருங்கிணைக்கும் இந்த விடுதியில் 7 பிரத்தியேக ஆடம்பர அறைகள் மட்டுமே உள்ளன.

நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம், இலங்கையின் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த மற்றுமொரு முக்கிய பெருமையாகும்.

Recommended For You

About the Author: admin