பிரித்தானிய வானில் ஈழத்தமிழர் ஒருவர் படைத்துள்ள இந்தச் சாதனை
பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர்,
லண்டன் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையின் முதல் விமானத்தை இயக்கிய விமானிகளுள் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈழத்தமிழரான சிரேஷ்ட விமானி பிரதீப் விமல்ராஜும் இடம்பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது சிறுவயதைக் கழித்த பிரதீப் விமல்ராஜ், சர்வதேச விமான சேவை நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தாய்நாட்டிற்கான முதல் விமானப் பயணத்தில் பங்கெடுத்தமை தனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம் என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது தாயகத்துடனான ஆழ்ந்த தொடர்பையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் பங்கேற்ற பெருமையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய வானில் ஈழத்தமிழர் ஒருவர் படைத்துள்ள இந்தச் சாதனை உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குப் பெருமிதத்தை அளித்துள்ளது.

