ஒரே ஏவுதலில் 28 இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை!
விண்வெளித்துறையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஒரே ஏவுதலின் மூலம் 28 குறைந்த புவிவட்டப்பாதை
இணைய செயற்கைக் கோள்களை (Low-orbit internet satellites) சீனா வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.
ஹைனான் தீவிலுள்ள (Hainan Island) சீனாவின் வர்த்தக விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ‘லாங் மார்ச் 8A’ (Long March 8A) ரொக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.
பெய்ஜிங் நேரப்படி அக்டோபர் 25 ஆம் திகதி காலை 10:03 மணிக்கு ஏவப்பட்ட இந்த ரொக்கெட், திட்டமிட்டபடி செயற்கைக்கோள்களை அவற்றுக்குரிய சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் இணைய வலையமைப்புக்கு மாற்றாக மற்றும் போட்டியாக,
சீனா தனது சொந்த குறைந்த புவிவட்டப்பாதை தொலைத்தொடர்பு மற்றும் இணைய செயற்கைக்கோள் கூட்டமைப்பை (Mega-constellation) தீவிரமாக உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த வர்த்தக ரீதியிலான ஏவுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

