பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி: விஷ்மி, ஹர்ஷிதா சதமடித்து அசத்தல்!

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 273 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த இலங்கை அணி 46.5 ஓவர்களில் 275 ஓட்டங்களை எடுத்து வென்றது.

விஷ்மி குணரத்ன (123) மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம (100*) ஆகியோர் சதமடித்து அசத்தினர். இவர்கள் 2ஆவது விக்கெட்டுக்காகப் பகிர்ந்த 203 ஓட்டங்கள் இலங்கை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய இணைப்பாட்டச் சாதனையாகப் பதிவானது.

Recommended For You

About the Author: admin