இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரப்பயண சேவைகளுக்காக முன்னதாகக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்த சாதாரண (Standard) ரகத்தைச் சேர்ந்த 600 பஸ்களுக்குப் பதிலாக, மேலதிக வசதிகள் கொண்ட புதிய குளிரூட்டப்பட்ட (Deluxe) 600 பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் அரசாங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 முதல் 54 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், 2025-2026 சாலை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரப்பயண சேவைகளுக்குக் குளிரூட்டப்பட்ட Deluxe ரக பஸ்களைப் பயன்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த புதிய விவரக்குறிப்புகளுக்கு அமைவாக இந்தப் பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. See less

