புதிய வாடிக்கையாளர்களை முறையாகச் சரிபார்க்கத் தவறிய ஜனசக்தி ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு இலங்கை நிதியியல் புலனாய்வுப் பிரிவு (FIU) ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தடைப்பட்டியலில் உள்ளவர்களுடன் புதிய வணிகத் தொடர்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதில் தாமதம் காட்டியமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரையிலான காலத்தில் விதிகளை மீறிய நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 14.6 மில்லியன் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜனசக்தி ஃபைனான்ஸ் நிறுவனம் தடைசெய்யப்பட்ட நபர்களுடன் எந்த வணிகத் தொடர்பையும் பேணவில்லை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

