திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் நீங்களானு கேட்கிறார்கள், ஜூன் 11ம் தேதி முக்கிய அறிவுப்பு வரும்: ராகவா லாரன்ஸ்
தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான ராஜினாமா கடிதத்தை அளித்தார். விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.
அதில் முதல்வர் விஜய் கட்சி சார்பில் திரையுலகை சேர்ந்த ஒருவரை தான் போட்டியாளராக நிறுத்தப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்த ஒருவர் வேறு யாரும் அல்ல சொந்த காசில் பலருக்கு நல்லது செய்து வரும் திறமைசாலியான ராகவா லாரன்ஸ் தான் என செய்திகள் வெளியானது.
சினிமாவில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கணக்கு பார்க்காமல் உதவுகிறார் லாரன்ஸ் மாஸ்டர். அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்ணா கட்சி சார்பில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி தான். அந்த தொகுதி மக்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். வெற்றி பெற்ற பிறகு அவர்களுக்கு நிறைய நல்லது செய்வார் என்று சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
அது நான் இல்லை: இந்நிலையில் தன் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு தேர்தலில் நான் போட்டியிடுவதாக பலரும் செய்தி வெளியிட்டுள்ளனர். இது உண்மையா என கேட்டு மீடியா நண்பர்கள் எனக்கு போன் செய்கிறார்கள். கணிப்பு அதிகமானதால் நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
நான் தற்போது பென்ஸ் படத்தில் பிசியாக நடித்து வருகிறேன். நான் வரும் காட்சிகள் தொடர்பான ஷெட்யூல் ஜூன் 10ம் தேதி முடிகிறது. என் அம்மாவின் ஆசியுடன் என் வாழ்க்கை தொடர்பான முக்கியமான அறிவிப்பை ஜூன் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடுவேன். மாற்றம் என தெரிவித்துள்ளார்.
அம்மா ஆசி, வியாழக்கிழமை அறிவிப்பு. அப்படி என்றால் விஜய், அண்ணாமலை மாதிரி புதுக்கட்சி துவங்கப் போகிறாரா?. லாரன்ஸ் மாஸ்டர் மட்டும் கட்சி ஆரம்பித்தால், அரசியலுக்கு வரும் முன்பு நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. ஜென் Z ஓட்டுக்கள் தானாக வரும். இளம் தலைமுறையினருக்கு அவ்வளவு உதவி செய்து வருகிறார். வாங்கணா, பார்த்துக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள். ஒரு சிலரோ, தயவு செய்து தவெகவில் சேர வேண்டாம். அது உங்களுக்கு சரியான கட்சி இல்லை. பேசாமல் அண்ணாமலையுடன் சேர்ந்துவிடுங்கள். உங்களின் அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்கிறார்கள். மேலும் சிலரோ, இந்த அரசியலே உங்களுக்கு வேண்டாம் அண்ணா, பேசாமல் படத்தில் மட்டும் நடிக்கவும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
ரசிகர்கள் ஆவல்: ஒரு வேளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன் என்பதால் லதாவின் இயக்கத்தில் சேரப் போகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஜூன் 11ம் தேதி அறிவிப்பு வரும் வரை இந்த கணிப்புகள் ஓயாது போன்று. ஏற்கனவே இருக்கும் கணிப்புகளுக்கு விளக்கம் அளிக்க தற்போது புது ரூட்டில் கணிக்கிறார்கள். இதற்கும் அவர் ஒரு விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும் போன்று.
இதற்கிடையே ராகவா லாரன்ஸ் இல்லை என்றால் எந்த பிரபலத்தை களத்தில் இறக்கப் போகிறார் விஜய் என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் நண்பர் ஸ்ரீநாத்தை இறக்கியது மாதிரி திருச்சியிலும் தனக்கு நெருக்கமானவரை தான் போட்டியாளர் ஆக்குவார் போன்று என பேசப்படுகிறது.
9000+ மேகசின்ஸ் எக்ஸ்ப்ளோர்

