கடவுளாக வணங்கப்படும் அஜித்… ரசிகர்களின் வியக்க வைக்கும் செயல்!
தமிழகம்- சென்னை அடுத்த கோபூர் பகுதியில், ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தச் சிலை திறப்பு விழாவில், திரளான ரசிகர்களும் அமைப்பின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிலைக்குப் பால் அபிஷேகம் செய்தும், மாலை அணிவித்தும், 108 தேங்காய்களை உடைத்தும் தங்கள் மகிழ்ச்சியையும் தீவிர ஆதரவையும் வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே, கோபூரில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நடிகர் அஜித்குமாருக்கென பிரத்யேகமாக ஒரு கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாகவும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

