இணையவழித் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி? சட்ட நடவடிக்கை கோரும் நட்சத்திர ஜோடி!
தங்களுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி நிழற்படங்கள், மற்றும் அவதூறு பதிவுகள் தொடர்பாகத் திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
அண்மைகாலமாக இணையத்தில் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாகப் பரப்பப்பட்டு வரும் பொய்ச் செய்திகள் மற்றும் இணையவழி துன்புறுத்தல்கள் (Online Harassment) அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீதும், வதந்திகளைப் பரப்பிவரும் சமூக வலைதளப் பக்கங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

