காக்கிச் சட்டையில் சாய் பல்லவி… மிரள வைக்கும் IPS அதிகாரி!

காக்கிச் சட்டையில் சாய் பல்லவி… மிரள வைக்கும் IPS அதிகாரி!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள

எதிர்பார்ப்புக்குரிய ‘ஓம்’ (OM) திரைப்படத்தில், நடிகை சாய் பல்லவி ‘நித்யா ரெட்டி’ என்னும் அதிரடி IPS அதிகாரியாக நடித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

 

முன்னதாக தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்த படைப்புகள் பெரிய அளவில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது சாய் பல்லவி காக்கிச் சட்டை அணிந்து காவல்துறை அதிகாரியாகக் களமிறங்குவது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் தயாராகி வரும் இந்த படம் வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin