பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு காலமானார்

பிரபல இந்திய சமையல் கலை நிபுணர் செஃப் தாமு என அழைக்கப்படும் கே. தாமோதரன் (72), சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (25) காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு, 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

சமையல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

மேலும், உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் நிபுணராகவும் அவர் அறியப்படுகிறார்.

அவரது மறைவு இந்திய சமையல் துறையில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin