இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (04.01) சனிக்கிழமை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில்,
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும் அவரிடமிருந்து, கைப்பற்றப்பட்ட போதை மத்திரைகளையும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.