மேஷம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சிளை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடல் நிலை சீராகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் மதியத்திற்கு பிறகு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.35 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கன்னி
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
துலாம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் கவன
விருச்சிகம்
.இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நினைத்தது நிறைவேறும்.
மகரம்
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.
கும்பம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும்.