அமைச்சரவை பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
புதிய அமைச்சரவை முதன் முறையாக நேற்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியது.
இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.