கிரிஷ் பரிவர்த்தனை விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிணை மறுப்பு! நவம்பர் 6 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் பிணை கோரிக்கைகளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும், எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

