யாழில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞனொருவர் கைது!

யாழில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞனொருவர் கைது!

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

உதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நேரம் வீட்டினை உடைத்து 18 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் உதயபுரம் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் 15 பவுண் நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin