பிரான்ஸில் வெடித்த போராட்டம்! – இந்தியக் குடிமக்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் வ*ன்முறைப் போராட்டங்கள் மற்றும் பகுதியளவிலான ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக, அந்நாட்டில் வாழும் தனது பிரஜைகளுக்கு இந்தியத் தூதரகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் பாடசாலைகளின் கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கித் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரிஸ், லீல், லியோன் மற்றும் நீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வன்முறை பரவியதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் உள்ளூர் அளவிலான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்குமாறு பிரான்ஸிலுள்ள இந்தியத் தூதரகம் தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அவசர தேவைகளின் போது பரிஸிலுள்ள இந்தியத் தூதரகம் அல்லது மார்சே நகரில் உள்ள துணைத் தூதரகத்தை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்ட 2,400க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 1,000 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸின் புகழ்பெற்ற மஞ்சள் சட்டை இயக்கமும் மாணவர் அமைப்புகளும் வார இறுதியில் பெரிய அளவிலான பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
சம்பவ இடங்களுக்குச் செல்வோர் பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் புதுப்பிப்புகளைத் தவறாது கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிரான்ஸில் அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும், மேலதிகப் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் அரசு கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
வரவிருக்கும் நவம்பர் 5ஆம் திகதி வர்த்தகச் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், பிரான்ஸில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

