கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதியின் அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.

 

மேலும், குறித்த ஆபத்தான கடற்பரப்புகளில் தற்போது தங்கியுள்ள அனைத்துக் கடற்றொழில் மற்றும் கடற்பயணப் படகுகளையும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாகக் கடற்றொழிலாளர்கள் மற்றும் மாலுமிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடற்படையினரும் உரிய அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin