ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம்!

ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த ரயில் பாதையில் ரயில் சேவைகள் இடம்பெறாது.

கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவினால் மண் மேடு ஒன்று ரயில் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாகவே ரயில் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை அகற்றி, ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில், குறித்த இரண்டு நாட்களிலும் அவசர திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட திகதிகளுக்காக ஏற்கனவே ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள், எந்தவொரு ரயில் நிலையத்திலும் தங்களது பயணச்சீட்டுகளைச் சமர்ப்பித்து முழுமையான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin