கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு “இளங்கலைஞர் விருது”!

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு “இளங்கலைஞர் விருது”!

இலங்கைத் தமிழ் இலக்கிய மற்றும் கலை உலகில் தனது சிறந்த எழுத்துக்களால் தடம் பதித்து வரும் பிரபல கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவித்துள்ளது.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற கவிஞர் அஸ்மின், தென்னிந்தியத் தமிழ் சினிமாவிலும் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது நீண்டகால கலைச் சேவைக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் படைப்புலகிற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

 

இவ்விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் அஸ்மின், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறினார். கலைஞர்களை ஊக்குவிக்கும் திணைக்களத்தின் இச்செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Recommended For You

About the Author: admin