தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எந்தவொரு இடத்திலும் குற்றச் செயல்கள் அல்லது திருட்டுகள் இடம்பெற்றிருந்தால் ஊடக நிகழ்ச்சிகளை நடத்தாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
உரிய முறைப்பாடுகள் செய்து, பொலிஸ் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் மேலும், பொய்யான பிரசாரங்களுக்கு சேறு பூச வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று பொஹொட்டுவ மீது தொடர்ச்சியாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை சகித்துக் கொள்ள முடியாது எனவும், அந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்