நடிகை அம்மு அபிராமி பைரவா, அசுரன், ராட்சசன், என் ஆளோட செருப்பக் காணோம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததோடு, குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களின் இயக்குநர் பார்த்திபனை அம்மு அபிராமி காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.
மேற்படி பார்த்திபனின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராமில். ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர். பிறந்ததற்கு நன்றி வாழ்வில் வந்ததற்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளதாகவும் இரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.