பங்களாதேஷின் தோல்வி: இலங்கை அணிக்கு உருவாகியுள்ள வாய்ப்பு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று நடைபெற்றுவரும் ரி20 உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

பல்வேறு அணிகள் தங்கள் சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன.

ஏ பிரிவில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து உடனான ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் அமெரிக்கா அணி இலகுவாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

குறித்த பிரிவில் உள்ள ஜாம்பவான் அணியான பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் அந்த அணிக்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலும் அமெரிக்கா அணியின் வெற்றி தோல்வியில்தான் பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு உள்ளது.

பி பிரிவில் அவுஸ்ரேலியா, இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அடுத்த அணி ஸ்கொட்லாந்தா அல்லது இங்கிலாந்தா என்ற போட்டி நிலவுகிறது.

சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப்பெற்றுள்ளன.

அந்தப் பிரிவில் உள்ள ஜம்பவான் அணியான நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் விளையாடியுள்ளதுடன், அந்தப் போட்டியில் ஆப்கான் அணியிடம் தோல்வியையே சந்தித்தது.

டி பிரிவில் விளையாடும் தென்னாப்பிரிக்கா அணி சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. பங்களாதேஷ், நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.

இலங்கை அணி உள்நுழைய வேண்டுமென்றால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.

அதேபோன்று பங்களாதேஷ் அணி அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். அதேபோன்று நெதர்லாந்து அணியும் அடுத்துவரும் போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.

என்றாலும், இலங்கைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இன்றைய தினத் நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.

Recommended For You

About the Author: admin