நடுகடலில் தத்தளித்த ஈரானிய மாலுமிகள் – இலங்கைக்குள் அழைத்துவரப்பட்டனர்

நடுகடலில் தத்தளித்த ஈரானிய மாலுமிகள் – இலங்கைக்குள் அழைத்துவரப்பட்டனர்

இலங்கையின் கடல் எல்லையிலிருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில், சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல்களில் பணியாற்றிய சுமார் 40 மாலுமிகள் காலி துறைமுகம் ஊடாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மாலுமிகள் சிலருக்கு ஏற்பட்ட திடீர் சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக, அவர்கள் அவசரமாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாலுமிகளின் உடல்நிலை தொடர்பாகக் கிடைத்த அவசரத் தகவல்களின் அடிப்படையில், கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளின் கீழ் இந்த மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரைக்கு அழைத்து வரப்பட்ட மாலுமிகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் மீண்டும் ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றதாகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Recommended For You

About the Author: admin