இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.405 மில்லியன் செலவு!
2019ஆம் ஆண்டு முதல் 2026 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ.405 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி அறிக்கைகளை மேற்கோள்காட்டி Sunday Times செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், தினசரிக் கொடுப்பனவுகளுக்காக ரூ.231.47 மில்லியனும், விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் விசாக்களுக்காக ரூ.163.41 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளன.
முன்னாள் தலைவர் ஷம்மி சில்வாவுக்காக அதிகபட்சமாக ரூ.91.86 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செலவுகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

