முதல் வாரத்திலேயே ரூ.549 கோடிக்கும் அதிக வசூல்! புதிய சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’

முதல் வாரத்திலேயே ரூ.549 கோடிக்கும் அதிக வசூல்! புதிய சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’

தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம்.

திரையரங்குகளில் வெளியான முதல் வாரத்திலேயே 549 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியான இத்திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஏற்கனவே வெற்றிபெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும்.

இதில், ரஜினிகாந்த் மீண்டும் ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும், ஹிருத்திக் ரோஷன், எஸ்.ஜே.சூர்யா, சூராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், முதல் வாரத்திலேயே 549 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin